தமிழ்நாடு செய்திகள்
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 646 கன அடியாக சரிவு
- மேட்டூர் அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக விநாடிக்கு 1,500 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
- அணைக்கு வரும் நீரின் அளவை விட அதிக தண்ணீர் திறக்கப்படுவதால் நீர்மட்டம் வேகமாக சரிந்து வருகிறது.
மேட்டூர்:
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் மழையை பொறுத்து ஒகேனக்கல், மேட்டூர் அணைக்கான நீர்வரத்து அதிகரிப்பதும், சரிவதுமாக உள்ளது.
ஒகேனக்கல் காவிரியில் நீர்வரத்து விநாடிக்கு 1000 கன அடியாக நீடிக்கிறது. இதேபோல், மேட்டூர் அணைக்கு நேற்று விநாடிக்கு 797 கன அடியாக இருந்த நீர்வரத்து, இன்று காலை நிலவரப்படி விநாடிக்கு 646 கன அடியாக சரிந்தது.
அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக விநாடிக்கு 1,500 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணைக்கு வரும் நீரின் அளவை விட அதிக தண்ணீர் திறக்கப்படுவதால் நீர்மட்டம் வேகமாக சரிந்து வருகிறது. நேற்று அணையின் நீர்மட்டம் 102.24 அடியாக இருந்த நிலையில், இன்று காலை 102.16 அடியாக குறைந்துள்ளது.