தமிழ்நாடு செய்திகள்

முக ஸ்டாலின்

உலக ரத்ததான தினம்: மனித உயிரைகாக்க ரத்ததானம் செய்வோம்- மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்

Published On 2022-06-14 14:30 IST   |   Update On 2022-06-14 15:08:00 IST
  • விபத்து, அறுவை சிகிச்சை உள்ளிட்ட அவசரத் தேவைகளின்போது பிறர் உயிர் காக்க குருதி கொடையளிப்போரின் நல்லுள்ளம் போற்றுவோம்.
  • குருதிக் கொடையளித்து மனித உயிர் காப்போம்! மானுடம் தழைக்கச் செய்வோம்.

சென்னை:

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ள பதிவு வருமாறு:-

விபத்து, அறுவை சிகிச்சை உள்ளிட்ட அவசரத் தேவைகளின்போது பிறர் உயிர் காக்க குருதி கொடையளிப்போரின் நல்லுள்ளம் போற்றுவோம்.

சாதி-மதம்-நிறம்-பாலினம் என எந்த வேறுபாடும் குருதிக் கொடைக்கில்லை.

குருதிக் கொடையளித்து மனித உயிர் காப்போம்! மானுடம் தழைக்கச் செய்வோம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News