தமிழ்நாடு செய்திகள்

காமராஜருக்கு வெண்கல சிலை- ஆலங்குளம் மக்களுக்கு கமல்ஹாசன் பாராட்டு

Published On 2023-07-15 13:31 IST   |   Update On 2023-07-15 13:31:00 IST
  • ஆலங்குளத்தில் கர்ம வீரர் காமராஜரின் வெண்கல சிலை திறக்கப்படும் செய்தியை டி.பி.வி. கருணாகராஜா வாயிலாக அறிந்தேன்.
  • காமராஜர் எனும் மகத்தான மனிதரை அறிந்து கொள்ளவும் போற்றிப்புகழவும் செய்யக்கூடிய எந்த முயற்சியும் பாராட்டுக்குரியதே.

சென்னை:

மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

ஆலங்குளத்தில் கர்ம வீரர் காமராஜரின் வெண்கல சிலை திறக்கப்படும் செய்தியை டி.பி.வி. கருணாகராஜா வாயிலாக அறிந்தேன். மிக்க மகிழ்ச்சி அடைந்தேன். 50 ஆண்டுகளுக்கு முன்பு நிறுவப்பட்ட மண் சிலை இந்த இடத்தில் இருந்தது.

சிலையின் முன்பு பிரசாரம் செய்தது நினைவுக்கு வருகிறது. காமராஜர் எனும் மகத்தான மனிதரை அறிந்து கொள்ளவும் போற்றிப்புகழவும் செய்யக்கூடிய எந்த முயற்சியும் பாராட்டுக்குரியதே. இன்றைய தலைமுறைக்கு அவரை கொண்டு சேர்ப்பது நம் கடமை. அதை சரியாக செய்யும் ஆலங்குளம் பகுதி மக்கள் அனைவரையும் மனதார பாராட்டி வாழ்த்துகிறேன்.

இவ்வாறு கமல்ஹாசன் கூறிஉள்ளார்.

Tags:    

Similar News