தமிழ்நாடு செய்திகள்
ஆதரவற்ற மகளிர் நலவாரியத்துக்கு தமிழக அரசு அரசாணை வெளியீடு
- சமூக நலத்துறை அமைச்சரை தலைவராக கொண்டு நல வாரியம் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
- திட்டங்களை வகுத்து பாதுகாப்பான சூழலை உருவாக்க நல வாரியம் அமைக்கப்பட்டுள்ளது.
கைம்பெண்கள், ஆதரவற்ற மகளிர் நல வாரியம் அமைத்ததற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டது. சமூக நல வாரியம் கலைக்கப்பட்டு அதன் செயல்பாடுகள் அனைத்தும் ஆதரவற்ற மகளிர் நல வாரியத்துடன் இணைக்கப்படுகிறது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கணவனால் கைவிடப்பட்ட, ஆதரவற்ற, நலிவுற்ற பெண்கள், முதிர்கன்னிகளின் பிரச்னைகளை களைய தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
கல்வி, சுகாதாரம், வேலைவாய்ப்பு, தொழிற்பயிற்சி உள்ளிட்ட திட்டங்களை வகுத்து பாதுகாப்பான சூழலை உருவாக்க நல வாரியம் அமைக்கப்பட்டுள்ளது.
மேலும், சமூக நலத்துறை அமைச்சரை தலைவராக கொண்டு நல வாரியம் செயல்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.