தமிழ்நாடு செய்திகள்
வார தொடக்கத்தில் சற்று குறைந்த தங்கம் விலை
- வெள்ளி விலையும் சற்று குறைந்துள்ளது.
- கிராமுக்கு 30 பைசாக்கள் குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.99.70-க்கும் விற்பனையாகிறது.
சென்னை:
சென்னையில் வாரத்தொடக்க நாளான இன்று ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்து ஒரு சவரன் ரூ.54,280-க்கும் கிராமுக்கு ரூ.20 குறைந்து ஒரு கிராம் ரூ.6,785-க்கும் விற்பனையாகிறது.
வெள்ளி விலையும் சற்று குறைந்துள்ளது. கிராமுக்கு 30 பைசாக்கள் குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.99.70-க்கும் கிலோவுக்கு ரூ.300 குறைந்து பார் வெள்ளி ரூ.99,700-க்கும் விற்பனையாகிறது.