தமிழ்நாடு செய்திகள்
ரூ.53ஆயிரத்தை தாண்டிய தங்கம் விலை
- வெள்ளி விலையும் உயர்ந்துள்ளது.
- கிராமுக்கு 1 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.88-க்கும் பார் வெள்ளி ரூ.88,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
சென்னை:
சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக உயர்ந்த வண்ணம் உள்ளது. இதனால் தங்கம் வாங்குவோர் மற்றும் நடுத்தர மக்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.
இந்நிலையில் வார தொடக்கமான முதல் நாளான இன்று தங்கம் விலை உயர்ந்துள்ளது. தங்கம் கிராமுக்கு ரூ.45 உயர்ந்து ஒரு கிராம் ரூ.6,660-க்கும் சவரன் ரூ.360 உயர்ந்து ஒரு சவரன் ரூ.53,280-க்கும் விற்பனையாகிறது.
வெள்ளி விலையும் உயர்ந்துள்ளது. கிராமுக்கு 1 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.88-க்கும் பார் வெள்ளி ரூ.88,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.