தமிழ்நாடு செய்திகள்

பிரதமரின் தியானத்துக்கு எதிர்ப்பு: தி.மு.க.-காங்கிரசுக்கு ஜி.கே.வாசன் கண்டனம்

Published On 2024-05-30 11:59 IST   |   Update On 2024-05-30 11:59:00 IST
  • பிரதமர் நரேந்திர மோடியின் தமிழக ஆன்மிகப் பயணம் வரவேற்கத்தக்கது.
  • சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபத்தில் பிரதமர் தியானம் செய்வது அவரது உயர் ஆன்மிகத்திற்கு எடுத்துக்காட்டாகும்.

சென்னை:

த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

பிரதமர் நரேந்திர மோடியின் தமிழக ஆன்மிகப் பயணம் வரவேற்கத்தக்கது.

சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபத்தில் பிரதமர் தியானம் செய்வது அவரது உயர் ஆன்மிகத்திற்கு எடுத்துக்காட்டாகும்.

பிரதமர் மீது அவதூறு கூற வேண்டும் என்ற எண்ணத்தின் அடிப்படையில் காங்கிரஸ், தி.மு.க கூட்டணி இதனை குறை கூறுவதை மக்கள் ஏற்றுக்கொள்ளத் தயாராக இல்லை.

இது காங்கிரஸ், தி.மு.க கூட்டணியின் குறுகியப் பார்வைக்கு எடுத்துக்காட்டாகும். எனவே இதனை கண்டிக்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags:    

Similar News