தமிழ்நாடு செய்திகள்

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்- காங்கிரஸ் சார்பில் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் போட்டி

Published On 2023-01-22 19:05 IST   |   Update On 2023-01-22 19:05:00 IST
  • ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தனக்கு பதிலாக எனது இளைய மகன் போட்டியிட விருப்பம் தெரிவித்திருந்தார்.
  • இடைத்தேர்தலில் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் போட்டியிடுவார் என அகில இந்திய காங்கிரஸ் தலைமை அறிவித்துள்ளது.

ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தல் வரும் பிப்ரவரி மாதம் 27ம் தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தலில் போட்டியிடுவதற்காக அதிமுக போட்டியிடுவதாக அறிவித்துள்ளது.

திமுக சார்பில் கூட்டணி கட்சியான காங்கிரஸ் போட்டியிடும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. ஆனால், வேட்பாளர் யார் என்பது குறித்து அறிவிக்கப்படாமல் இருந்தது.

காங்கிரஸ் மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவனின் மூத்த மகன் கடந்த சில நாட்களுக்கு முன்பு மரணமடைந்த நிலையில் தான் போட்டியிடப்போவதில்லை என்றும் தனக்கு பதிலாக எனது இளைய மகன் போட்டியிடவும் விருப்பம் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் போட்டியிடப்போவதாக அகில இந்திய காங்கிரஸ் தலைமை அறிவித்துள்ளது.

Tags:    

Similar News