தமிழ்நாடு செய்திகள்

பாராளுமன்ற தேர்தல் முடிவு - "அ.தி.மு.க.-வுக்கு வெற்றியே" : இபிஎஸ் புது விளக்கம்

Published On 2024-06-08 12:01 IST   |   Update On 2024-06-08 12:01:00 IST
  • தென்மாவட்டங்களில் அ.தி.மு.க.வை வலுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.
  • அ.தி.மு.க.வில் குழப்பத்தை ஏற்படுத்த பல்வேறு தரப்பினர் முயற்சி.

ஓமலூர்:

சேலம் மாவட்டம் ஓமலூரில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

* தி.மு.க. கூட்டணிக்காக ஸ்டாலின், உதயநிதி, திருமாவளவன் உள்ளிட்டோர் பிரசாரம் செய்தனர்.

* அ.தி.மு.க. கூட்டணியில் நான் மட்டுமே மாநிலம் முழுவதும் பிரசாரம் செய்தேன்.

* கடந்த தேர்தலை விட அ.தி.மு.க.விற்கு கூடுதல் வாக்குகள் கிடைத்துள்ளது.

* 2019-ல் தி.மு.க. வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள் 33.52, 2024-ல் பெற்ற வாக்குகள் 26.93.

* கடந்த தேர்தலை விட சுமார் 6 விழுக்காடு வாக்குகளை தி.மு.க. குறைவாக பெற்றுள்ளது.

* 2019 தேர்தலை விட 2024 தேர்தலில் தி.மு.க. கூட்டணி வாக்குகளும் 6 சதவீதம் அளவிற்கு குறைந்தது.

* தென்மாவட்டங்களில் அ.தி.மு.க.வை வலுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.

* அ.தி.மு.க.வில் குழப்பத்தை ஏற்படுத்த பல்வேறு தரப்பினர் முயற்சி.

* எஸ்.பி.வேலுமணிக்கும் எனக்கும் பிரச்சனை என திட்டமிட்டு பொய் பரப்பி குழப்பம் விளைவிக்க முயற்சி.

* அமைச்சர் ரகுபதிக்கு அதிமுகவை பற்றி பேச அருகதை இல்லை.

இவ்வாறு எடப்பாடி பழனிசாமி கூறினார்.

Tags:    

Similar News