தமிழ்நாடு செய்திகள்

நான் தி.மு.க.வை விட்டு எங்கும் செல்ல மாட்டேன்- சமூக வலைத்தள வதந்திக்கு அய்யப்பன் எம்.எல்.ஏ. பதில்

Published On 2022-07-08 14:20 IST   |   Update On 2022-07-08 17:07:00 IST
  • தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின்பேரில் மக்கள் பணியை மும்முரமாக செய்து வருகிறேன்.
  • நான் எந்த கட்சிக்கும் செல்லமாட்டேன்.

கடலூர்:

கடலூர் தொகுதி எம்.எல்.ஏ.வாக அய்யப்பன் உள்ளார். இவர் கடந்த சில நாட்களாக பாரதிய ஜனதா கட்சிக்கு செல்வதாக சமூக வலைத்தளங்களில் வதந்தி வேகமாக பரவியது. இதுகுறித்து அய்யப்பன் எம்.எல்.ஏ.விடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-

நான் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் செயல்படும் அரசு மற்றும் தி.மு.க.வில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறேன். தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின்பேரில் மக்கள் பணியை மும்முரமாக செய்து வருகிறேன். தற்போது சமூக வலைதளங்களில் தேவையற்ற வதந்திகள் பரவி வருகிறது. அது முழுக்க முழுக்க வதந்திதான். தி.மு.க. தலைவரும், முதல்-அமைச்சருமான மு.க. ஸ்டாலின் தலைமையில் தொடர்ந்து இயங்கி வருகிறேன். நான் எந்த கட்சிக்கும் செல்லமாட்டேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News