தமிழ்நாடு

எங்க பக்கத்தில் வாங்கண்ணே...

Update: 2023-06-03 10:05 GMT
  • அரசியலில் எதிரும் புதிருமாக இருந்தாலும் அரசியல்வாதிகளுக்கு இடையே அவ்வப்போது பல சுவாரஸ்ய சம்பவங்கள் நடக்கும்.
  • கவர்னர் மாளிகையில் தலைமை நீதிபதி பதவியேற்பு விழாவிலும் ஒரு சுவாரஸ்யம் அரங்கேறியது.

அரசியலில் எதிரும் புதிருமாக இருந்தாலும் அரசியல்வாதிகளுக்கு இடையே அவ்வப்போது பல சுவாரஸ்ய சம்பவங்கள் நடக்கும்.

அப்படித்தான் கவர்னர் மாளிகையில் தலைமை நீதிபதி பதவியேற்பு விழாவிலும் ஒரு சுவாரஸ்யம் அரங்கேறியது.

முன் வரிசையில் அமைச்சர்கள் சேகர்பாபு, ரகுபதி, கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு ஆகியோர் அமர்ந்து இருந்தனர். அப்போது ஓ.பன்னீர்செல்வம் உள்ளே வந்தார். அவரை பார்த்ததும் அத்தனை அமைச்சர்களும் ஒன்று போல் எழுந்து வணக்கம் தெரிவித்தார்கள். அவரும் பதிலுக்கு நன்றி தெரிவித்து ஒவ்வொருவரிடமும் ஓரிரு வார்த்தைகள் பேசினார். கடைசியாக தங்கம் தென்னரசு பக்கம் சென்றதும் ஓ.பி.எஸ்.சிடம் வாங்கண்ணே எங்க பக்கம் உட்காருங்கண்ணே என்றபடி அமைச்சர்களுக்கு மத்தியில் இருந்த இருக்கையில் அமரும்படி கையை பிடித்து அமர சொன்னார்கள்.

ஆனால் அதில் அமராமல் தங்கம் தென்னரசு அருகில் சென்று அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார். எதிர்க்கட்சியில் பிரச்சினை ஏற்பட்டால் தானே ஆளுங் கட்சிக்கு நல்லது. அதன்படி எங்களுக்கு நீங்கதாண்ணே கைகொடுத்தீங்க... என்ற என்றியோ....? என்று பார்வையாளர்கள் பேசிக் கொண்டார்கள்.

Tags:    

Similar News