தமிழ்நாடு செய்திகள்

தேர்தல் அறிக்கை தயாரிக்கும் அ.தி.மு.க. குழு 5-ந்தேதி முதல் மக்களிடம் கருத்து கேட்பு

Published On 2024-01-26 13:10 IST   |   Update On 2024-01-26 13:10:00 IST
  • அ.தி.மு.க.வின் சார்பில் தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு அறிவிக்கப்பட்டு உள்ளது.
  • மக்கள் பிரச்சனைகளுக்கான தீர்வுகளை, எதிர்கால நாட்டின் வளர்ச்சிக்கான திட்டங்களை உள்ளடக்கியதாக கழகத்தின் தேர்தல் அறிக்கைகள் இருந்திருக்கின்றன.

சென்னை:

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

18-வது பாராளுமன்ற மக்களவை பொதுத்தேர்தல் விரைவில் நடைபெற உள்ளதை முன்னிட்டு, அ.தி.மு.க.வின் சார்பில் தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு அறிவிக்கப்பட்டு உள்ளது.

எந்தவொரு தேர்தல் என்றாலும், மக்கள் பிரச்சனைகளுக்கான தீர்வுகளை, எதிர்கால நாட்டின் வளர்ச்சிக்கான திட்டங்களை உள்ளடக்கியதாக கழகத்தின் தேர்தல் அறிக்கைகள் இருந்திருக்கின்றன. அதுபோன்றே, சமீப காலங்களில் ஏற்பட்டுள்ள

சமூக அரசியல், பொருளாதார மாற்றங்களை கணக்கில் எடுத்து, தமிழ்நாட்டின் நலனை முன்னிலைப்படுத்துவதும், இந்திய சமூக அரசியல் முன்னேற்றத்திற்கு ஆக்கப்பூர்வமான பங்களிப்பை வழங்குவதுமான ஒரு தேர்தல் அறிக்கையை தயாரிக்கும் பொருட்டு, தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவினர் தமிழ்நாடு முழுவதும் வருகிற 5-ந்தேதி முதல் 10-ந் தேதி வரை, கீழ்க்கண்ட 9 மண்டலங்களுக்கு சுற்றுப் பயணம் செய்து பல்வேறு தரப்பு மக்களையும் சந்தித்து தரவுகளை சேகரித்து, ஆகச் சிறந்த தேர்தல் அறிக்கை தயார் செய்யப்பட உள்ளது.

அதன்படி, 5-ந்தேதி சென்னை, வேலூர், 6-ந்தேதி விழுப்புரம், சேலம், 7-ந்தேதி தஞ்சை, திருச்சி, 8-ந்தேதி கோவை, மதுரை, 10-ந்தேதி நெல்லை மண்டலங்களில் கருத்து கேட்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News