தமிழ்நாடு செய்திகள்
பழவந்தாங்கலில் திடீரென தீ பிடித்த கார்கள்- போலீஸ் விசாரணை
- வீட்டின் அருகே நிறுத்தப்பட்டிருந்த 2 கார்கள் திடீரென தீப்பிடித்து எரிந்து சேதமடைந்தது.
- பழவந்தாங்கல் போலீசார் தீ விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை, பழவந்தாங்கலில் இன்று அதிகாலை வீட்டின் அருகே நிறுத்தப்பட்டிருந்த 2 கார்கள் திடீரென தீப்பிடித்து எரிந்து சேதமடைந்தது.
தீ கொளுந்துவிட்டு எரிந்ததை அடுத்து, தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு போலீசார், தீயணைப்பு வீரர்கள் விரைந்து தீயை அணைத்தனர்.
இந்நிலையில் வீட்டின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த கார்கள் எப்படி தீ பிடித்தது என்பது குறித்து பழவந்தாங்கல் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.