தமிழ்நாடு

தமிழக 'ரேவந்த் ரெட்டியா'?

Published On 2023-12-16 11:02 GMT   |   Update On 2023-12-16 11:02 GMT
  • களப்பணியை சொந்த கட்சிக்காரர்கள் மட்டுமில்லாமல் மற்ற கட்சிக்காரர்களும் வியந்து பார்க்கிறார்கள்.
  • அப்ப கூட்டணி தேவையில்லையா? பார்த்து பேசுங்க!

தெலுங்கானா மாநிலத்தில் அதல பாதாளத்தில் கிடந்த காங்கிரசை 15 ஆண்டுகளுக்கும் மேலாக தனது அயராத உழைப்பால் உயர்த்தி, ஆட்சியை கைப்பற்றி, முதல்-மந்திரியாகவும் ஆகி இருப்பவர் ரேவந்த் ரெட்டி. அவரது களப்பணியை சொந்த கட்சிக்காரர்கள் மட்டுமில்லாமல் மற்ற கட்சிக்காரர்களும் வியந்து பார்க்கிறார்கள்.

இப்போது அதே பணியில் தமிழகத்தின் அடுத்த ரேவந்த் ரெட்டி, கார்த்தி ப.சிதம்பரம் தான் என்று காலரை தூக்கி விடுவதை பார்த்து சொந்த கட்சிக்காரர்களே கலாய்க்கிறார்கள்.

கார்த்தி சிதம்பரம் ஆதரவாளர்கள் சிலர் சத்திய மூர்த்தி பவனில் இவ்வாறு பேசவும் அதை கேட்ட சக காங்கிரஸ்காரர்களே வடிவேல் பாணியில் 'அய்யோ... அய்யோ... ஏம்பா... காமெடி கீமெடி பண்ணலியே' என்றனர்.

அடுத்தவர், தலைவா... அம்பது வருஷமாகியும் இன்னும் அப்படியே தான் இருக்கிறோம். கூட்டணி இல்லண்ணா சிக்கல்தான் என்ற நிலையில் எப்ப ரேவந்த் ரெட்டியாக மாறி எப்ப ஆட்சிக்கு வருவது. அப்ப கூட்டணி தேவையில்லையா? பார்த்து பேசுங்க! இதை கேள்விப்பட்டால் தி.மு.க.வினர் கோவப்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்றார்.

இவ்வாறு அவர் கூறியதையும் கேட்டு அவர்களுக்குள் கலாய்த்து கொண்டார்கள்.

ஆனால் கார்த்தியின் ஆதரவாளர்கள் அவர்தான் தலைவராவார் என்பதிலும் அவரைப் பற்றிய தகவல்களை சமுக வளைத்தளங்களில் பரப்புவதிலும் தீவிரமாக இருக்கிறார்கள். இரண்டு நாட்களுக்கு முன்பு பாராளுமன்றத்துக்குள் நடந்த புகை குண்டு தாக்குதல் பற்றி வலைதளங்களில் 'தலைவர் ராகுலை காத்தவர் எங்கள் கார்த்தி தலைவர் தான்' என்று கலர்கலராக பரப்பினார்கள்.

Tags:    

Similar News