தமிழ்நாடு செய்திகள்
நாகர்கோவிலைச் சேர்ந்த மாணவி தென்னிந்திய அழகியாக தேர்வு
- வெற்றி பெற்று பதக்கங்களுடன் சொந்த ஊருக்கு இன்று வந்த அவரை, உறவினர்கள், பெற்றோர், நண்பர்கள் உற்சாகமாக வரவேற்றனர்.
- மாணவி நிஷோஜா ஏற்கனவே கன்னியாகுமரி மாவட்ட அளவில் நடைபெற்ற போட்டியில் வெற்றி பெற்று மிஸ் கன்னியாகுமரி பட்டத்தை வென்றுள்ளார்.
நாகர்கோவில்:
நாகர்கோவில் கார்மல் நகர் பகுதியை சேர்ந்தவர் நிஷோஜா. மருத்துவக் கல்லூரி மாணவியான இவர், ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் நடைபெற்ற தேசிய அளவிலான அழகுப் போட்டியில் கலந்து கொண்டார்.
இந்தியா முழுவதும் உள்ள அனைத்து மாநிலங்களில் இருந்தும் மாநிலத்துக்கு ஒருவர் பங்கேற்ற இந்த போட்டியில் தென்னிந்திய அழகியாக நிஷோஜா தேர்வு செய்யப்பட்டார்.
வெற்றி பெற்று பதக்கங்களுடன் சொந்த ஊருக்கு இன்று வந்த அவரை, உறவினர்கள், பெற்றோர், நண்பர்கள் உற்சாகமாக வரவேற்றனர்.
மாணவி நிஷோஜா ஏற்கனவே கன்னியாகுமரி மாவட்ட அளவில் நடைபெற்ற போட்டியில் வெற்றி பெற்று மிஸ் கன்னியாகுமரி பட்டத்தை வென்றுள்ளார்.
மேலும் மாநில அளவில் நடைபெற்ற போட்டியில் பங்கேற்று மிஸ் தமிழ்நாடு ரன்னர் என்ற பட்டத்தையும் பெற்றுள்ளார்.