தமிழ்நாடு

அந்தியூர் அடுத்த வரட்டுப்பள்ளம் அணை பகுதியில் சுற்றி திரியும் ஒற்றை யானை.

அந்தியூர் வரட்டுப்பள்ளம் அணை பகுதியில் சுற்றி திரியும் ஒற்றை யானை

Published On 2023-07-28 07:04 GMT   |   Update On 2023-07-28 07:04 GMT
  • பர்கூர் அடிவார பகுதியில் அமைந்துள்ளது வரட்டுப்பள்ளம் அணை.
  • யானைகள் தண்ணீரை பருகி அதில் குளித்து மகிழ்ந்து செல்கின்றது.

அந்தியூர்:

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்த பர்கூர் வனப்பகுதி உள்ளது. இங்கு யானை, மான், கரடி, செந்நாய் உள்ளிட்ட வன விலங்குகள் வசித்து வருகின்றனர்.

பர்கூர் அடிவார பகுதியில் அமைந்துள்ளது வரட்டுப்பள்ளம் அணை. இந்த அணையில் தேக்கி வைக்கப்பட்ட நீரினை குடிப்பதற்காக வனவிலங்குகள் காலை, மாலை நேரங்களில் அதிக அளவில் வருவது உண்டு. அதில் குறிப்பாக யானைகள் தண்ணீரை பருகி அதில் குளித்து மகிழ்ந்து செல்கின்றது.

இந்த நிலையில் வரட்டுப்பள்ளம் அணை அருகே உள்ள சாலைகளிலும், அதனையொட்டி உள்ள வனப்பகுதிகளிலும் ஒற்றை யானையை சுற்றி திரிந்து வருகின்றது. இதனால் மலைப்பகுதிக்கு செல்லும் வாகன ஓட்டிகள் மிகுந்த கவனத்துடன் செல்ல வேண்டும் என்றும், யானையை பார்த்தவுடன் செல்பி எடுப்பது, செல்போனில் படம் பிடிப்பதை தவிர்க்க வேண்டும் என்று வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் இந்த சம்பவத்தினால் வன விலங்குகள் வாகனத்தில் செல்பவர்களை துரத்துவதும், வாகனத்தை சேதப்படுத்துவதும் தற்போது நிகழ்ந்து வருகிறது. அவ்வாறு நிகழாமல் இருக்க வாகன ஓட்டிகள் ஒத்துழைத்து வனவிலங்குகளிடம் இருந்து தங்களை பாதுகாத்து கொள்ள வேண்டும் என வனத்துறையினர் அறிவுறுத்துகின்றனர்.

Tags:    

Similar News