தமிழகத்தில் 3 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்- இந்திய வானிலை ஆய்வு மையம்
- தூத்துக்குடி, திருவாரூர் ஆகிய மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட்.
- மயிலாடுதுறை, கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களுக்கும் மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டி உள்ள தெற்கு இலங்கை கடலோர பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. அதன் காரணமாக தமிழ்நாட்டில் பல இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் வருகிற 20ம் தேதி வரை கனமழை மற்றும் மிக கனமழை பெய்வதற்கான வாய்ப்புள்ளது.
தமிழகத்தில் தஞ்சை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்டங்களுக்கு அதி கனமழை பெய்யக்கூடும் எனவும் இதற்காக இந்த மூன்று மாவட்டங்களுக்கும் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதாவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதேபோல், நெல்லை, கன்னியாகுமரி, சிவகங்கை, தூத்துக்குடி, திருவாரூர் ஆகிய மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
தென்காசி, விருதுநகர், மதுரை, தேனி, திண்டுக்கல், திருச்சி, பெரம்பலூர், அரியலூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர் ஆகிய மாவட்டங்களுக்கும் மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.