தமிழ்நாடு செய்திகள்
ஆந்திராவுக்கு வேனில் கடத்திய ஒரு டன் ரேசன் அரிசி பறிமுதல்- வாலிபர் கைது
- ஆந்திரா நோக்கி ரேசன் அரிசி கடத்தி சென்ற வேனை போலீசார் மடக்கி பிடித்தனர்.
- வேனுடன் ரேசன் அரிசி மூட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டது.
திருத்தணி:
திருத்தணி அருகே உள்ள கனகம்மாசத்திரம் அடுத்த ஆற்காடு குப்பம் பகுதியில் ஆந்திரா எல்லையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஆந்திரா நோக்கி ரேசன் அரிசி கடத்தி சென்ற வேனை மடக்கி பிடித்தனர். அதில் ஒரு டன் ரேசன் அரிசி மூட்டைகள் கடத்தி வந்திருப்பது தெரிந்தது.
இதையடுத்து திருவாலங்காடு அடுத்த சின்னம்மா பேட்டை, பூஞ்சோலை நகர் பகுதியை சேர்ந்த பிரசன்ன குமார் (30) என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும் வேனுடன் ரேசன் அரிசி மூட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டது.