தமிழ்நாடு செய்திகள்

புலவர் மா.நன்னன் எழுத்தால், சிந்தனையால், செயலால் வாழ்கிறார்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை

Published On 2023-07-31 00:57 IST   |   Update On 2023-07-31 01:30:00 IST
  • புலவர் நன்னன் எழுதிய 124 புத்தகங்கள் நாட்டுடமையாக்கப்படும்.
  • வாழ்நாள் எல்லாம் நாட்டுக்காக, மொழிக்காக பாடுபடுவது முக்கியமானது.

சென்னை தி.நகரில் எழுத்தாளர் மா.நன்னன் நூற்றாண்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துக் கொண்டார்.

இந்நிலையில், புலவர் மா.நன்னன் நூற்றாண்டு நிறைவு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.

அப்போது அவர் கூறியதாவது:-

மா.நன்னன் நூற்றாண்டு நிறைவு விழாவில் பங்கேற்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

இவ்விழாவில் பங்கேற்பதை பெருமையாக கருதுகிறேன்.

அவற் மறைந்த பிறகும், புத்தகம் அவரது பெயரால் வெளிவந்துக் கொண்டிருக்கிறது. அப்படியென்றால், எழுத்தால், சிந்தனையால், செயலால் அவர் வாழ்கிறார். 124 புத்தகங்களை நமக்காக உருவாக்கியுள்ளார்.

தனக்கென ஒரு எழுத்து நடையை, பேச்சு நடையை நன்னன் வைத்திருந்தார். பிழையின்றி எழுதுவதையும், பிழையின்றி பேசுவதையும் கற்பிக்கக்கூடிய ஆசானாக இருந்தார்.

புலவர் நன்னன் எழுதிய 124 புத்தகங்கள் நாட்டுடமையாக்கப்படும்.

வாழ்நாள் எல்லாம் நாட்டுக்காக, மொழிக்காக பாடுபடுவது முக்கியமானது.

பெரியார், கருணாநிதி, நன்னன் உள்ளிட்டோர் வாழ்நாள் முழுவதும் நாட்டுக்காக பாடுபட்டவர்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News