தமிழ்நாடு

புதுப்பொலிவுடன் டிடி தமிழ் சேனலை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி

Published On 2024-01-19 14:45 GMT   |   Update On 2024-01-20 02:02 GMT
  • கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டியில் கலந்து கொண்ட பிரதமர் மோடி, டிடி தமிழ் என பெயரில் ஒளிபரப்பை தொடங்கி வைத்தார்.
  • டிடி தமிழ் தொலைக்காட்சியை தொடங்குவதற்காக பிரசார் பாரதி சார்பில் ரூ.39.71 கோடி செலவு செய்யப்பட்டுள்ளது

சென்னை ஜவஹர்லால் நேரு விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்ற கேலோ இந்தியா இளையோர் விளையாட்டுப் போட்டிகளுக்கான தொடக்க நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரதமர் மோடி, பொதிகை சேனலை டிடி தமிழ் என்ற பெயரில் ஒளிபரப்பை தொடங்கி வைத்தார். பொது சேவை ஒளிபரப்பு நிறுவனமாக பிரசார் பாரதியின் கீழ் இயக்கும் தூர்தர்ஷன் பொதிகை தொலைகாட்சியில், புதிய தொடர்கள், புதிய நிகழ்ச்சிகள், புதிய வடிவமைப்பில் செய்திகள் ஆகியவற்றுடன் இன்று முதல் டிடி தமிழ் எனப் பெயர்மாற்றம் செய்யப்பட்டு, புதுப்பொலிவுடன் ஒளிபரப்பை தொடங்கியது.

புதிய அம்சங்களுடன் டிடி தமிழ் தொலைக்காட்சியை தொடங்குவதற்காக பிரசார் பாரதி சார்பில் ரூ.39.71 கோடி செலவு செய்யப்பட்டுள்ளது. பொதிகை என்ற பெயரில் இதுவரை ஒளிபரப்பு சேவையை வழங்கி வந்த இந்த தொலைக்காட்சி, பாரம்பரியம் குன்றாமல் புதிய நிகழ்ச்சிகளை அறிமுகம் செய்கிறது. இவற்றில் நான்கு பொழுது போக்கு நெடுந்தொடர்கள், திரைப்படங்கள், பாடல்கள் ஆகியவை ஒளிபரப்பு செய்யப்படுகிறது. 

Tags:    

Similar News