தி.மு.க., காங்கிரஸ் என்றால் ஊழல், குடும்ப ஆட்சி
- திமுகவின் பெண்கள் விரோத நடவடிக்கைக்கு எதிராக ஏப்ரல் 19ல் பெண்கள் வாக்களிக்க வேண்டும்.
- மத்திய அரசு வழங்கும் நிதியை திமுக அரசு வீணடிக்கிறது.
சேலம்:
பா.ஜ.க.வின் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி கூறியதாவது:
* உங்களுடைய சேவகனான இந்த மோடி, பெண்களின் நலனுக்காக பல நல திட்டங்களை கொண்டு வந்துள்ளேன்.
* தமிழ்நாட்டில் 3.65 கோடி மக்களுக்கு இலவச ரேஷன் கிடைக்கிறது.
* தமிழ்நாட்டில் குழாய் மூலம் குடிநீர் இணைப்பு வழங்குவதற்கான முயற்சிகளை மேற்கொண்டுள்ளோம்.
* இன்று பெண்கள் சக்தி மோடியின் பாதுகாப்பு கவசமாக இருக்கிறது.
* அடுத்த 5 ஆண்டுகளில் இந்த நலத்திட்டங்கள் இன்னும் வேகமாக பெண்களுக்கு வந்து சேரும்.
* ஜெயலலிதாவை திமுகவினர் எந்தவிதமாக நடத்தினார்கள் என்பது உங்களுக்கு தெரியும்.
* திமுகவின் பெண்கள் விரோத நடவடிக்கைக்கு எதிராக ஏப்ரல் 19ல் பெண்கள் வாக்களிக்க வேண்டும்.
* ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்கள் திமுக, காங்கிரஸ்.
* திமுக, காங்கிரஸ் என்றால் ஊழல், குடும்ப ஆட்சி.
* திமுக, காங்கிரசின் ஊழலை பற்றி பேசினால் ஒரு நாள் போதாது.
* தமிழகத்தின் வளர்ச்சிக்காக லட்சக்கணக்கான கோடி நிதி வழங்கப்படுகிறது.
* மத்திய அரசு வழங்கும் நிதியை திமுக அரசு வீணடிக்கிறது.
* மக்கள் தலைவர் ஜி.கே.மூப்பனாரை இந்த நேரத்தில் நினைவுகூர்கிறேன்.
* பெருந்தலைவர் காமராஜரை போன்ற மாபெரும் தலைவரை தந்த மண் இந்த தமிழக மண்.
* மதிய உணவு திட்டம் கொண்டு வந்து தமிழகத்தில் கல்வியை வளர்த்தவர் காமராஜர்.
* பாஜகவும், தேசிய ஜனநாயக கூட்டணியும் பெரிய கனவுகளை காண்கிறது. அந்த கனவுகளை நிச்சயம் அடைந்தே தீர்வோம் என்று கூறினார்.