தமிழ்நாடு

அவர்களிடம் பேசுவதற்கு விஷயம் ஒன்றுமில்லை - ஸ்டாலின், உதயநிதிக்கு அண்ணாமலை பதிலடி

Published On 2023-08-06 00:00 GMT   |   Update On 2023-08-06 00:00 GMT
  • எதிர்ப்பின்றி அனைவரும் இந்தியை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றார் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா.
  • உள்துறை மந்திரி அமித்ஷாவின் இந்தப் பேச்சுக்கு முதல்வர் ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் கண்டனம் தெரிவித்தனர்.

மதுரை:

மத்திய மாநில அலுவல் மொழிகள் குறித்த 38-வது பாராளுமன்ற கூட்டத் தொடர் நேற்று முன்தினம் டெல்லியில் நடைபெற்றது. இதில் பேசிய மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா, எதிர்ப்பின்றி அனைவரும் இந்தியை ஏற்றுக் கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.

உள்துறை மந்திரி அமித்ஷாவின் இந்தப் பேச்சுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாடு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், தமிழக பா.ஜ.க. தலைவரின் நடைபயணம் மதுரையை அடைந்தது. அங்கு செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, மு.க.ஸ்டாலினுக்கு ஆங்கிலமோ, இந்தியோ தெரியாததால் மத்திய மந்திரி அமித்ஷா கூறியதைப் புரிந்துகொள்ள முடியவில்லை. நமது தாய்மொழியில் கல்வி கற்க வேண்டும் என்று அமித்ஷா கூறினார். இந்த விவகாரத்தில் தி.மு.க. இன்னும் அரசியல் செய்து வருகிறது. ஸ்டாலினும், உதயநிதியும் ஸ்டாலினுக்கு மக்களிடம் பேச வேறு விஷயமில்லை. பிரதமர் மோடி உலக சுற்றுப்பயணத்தில் தமிழ் மொழியின் பெருமை பற்றி பேசினார். பிரான்சில் திருவள்ளுவர் சிலையை நிறுவப் போகிறார். வரும் தேர்தலில் தி.மு.க. படுதோல்வி அடையும் என்பது உறுதி என தெரிவித்தார்.

Tags:    

Similar News