தமிழ்நாடு செய்திகள்

என்.எல்.சி. திட்டங்களுக்கு நிலம் வழங்கிய குடும்பத்தினருக்கு வேலை- பிரதமருக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்

Published On 2022-08-05 18:35 IST   |   Update On 2022-08-05 18:35:00 IST
  • கேட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் பயிற்சி பட்டதாரி பொறியாளர்களை நியமிக்கக்கூடாது
  • பிரதமர் சாதகமான முடிவை எடுக்க வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் கேட்டுக்கொண்டார்.

சென்னை:

என்.எல்.சி. பணி நியமனம் தொடர்பாக பிரதமர் மோடிக்கு, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார்.

அதில், என்.எல்.சி.பயிற்சி பட்டதாரி பொறியாளர் பணிக்கான தேர்வில் தமிழக விண்ணப்பதாரர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்றும், என்.எல்.சி. திட்டங்களுக்கு நிலம் வழங்கிய குடும்பத்தின் விண்ணப்பதாரர்களை சிறப்பு தேர்வின் மூலம் நியமிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.

கேட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் பயிற்சி பட்டதாரி பொறியாளர்களை நியமிக்கக்கூடாது என்று வலியுறுத்தி உள்ளார்.

இந்த விஷயத்தில் பிரதமர் சாதகமான முடிவை எடுக்க வேண்டும் என்றும் முதல்வர் ஸ்டாலின் கேட்டுக்கொண்டார்.

Tags:    

Similar News