தமிழ்நாடு

2024-க்குப் பிறகு மோடி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் அரசமைப்புச் சட்டம், நீதிமன்றங்கள் இருக்காது: ஆ. ராசா

Published On 2023-11-08 01:12 GMT   |   Update On 2023-11-08 01:12 GMT
  • இந்துக்கள் என்ற பெயரால் உயர் சாதி மக்கள் மட்டும்தான் இருக்க முடியும்.
  • பாராளுமன்றத்தில் விவாதங்கள் நடைபெறாது. அதிபர் ஆட்சியாக மாறிவிடும்.

தி.மு.க. எம்.பி. ஆ. ராசா ஒரு நிகழ்ச்சியில் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

2024-ம் ஆண்டு மக்களவை தேர்தலுக்குப் பிறகு தப்பித்தவறி பிரதமர் மோடி மீண்டும் ஆட்சிக்கு வந்தால், இந்தியாவில் அரசமைப்பு சட்டம் இருக்காது. நீதிமன்றங்கள் இருக்காது. பாராளுமன்றத்தில் விவாதங்கள் நடைபெறாது. அதிபர் ஆட்சியாக மாறிவிடும்.

இந்துக்கள் என்ற பெயரால் உயர் சாதி மக்கள் மட்டும்தான் இருக்க முடியும். தாழ்த்தப்பட்டவரோ, பிற்படுத்தப்படவரோ, மிகவும் பிற்படுத்தப்பட்டவரோ, ஒரு இஸ்லாமியரோ, கிறிஸ்தவரோ, ஜைன மதத்தை சார்ந்தவரோ, புத்த மதத்தை சார்ந்தவரோ, ஏன் சீக்கிய மதத்தை சார்ந்தவரோ முழு உரிமையுடன் வாழ முடியாது என்ற சூழ்நிலையை மோடி கொண்டு வந்துள்ள திட்டத்தை நிறைவேற்றுவார்கள்.

இவ்வாறு தெரிவித்தார்.

Tags:    

Similar News