தமிழ்நாடு செய்திகள்

மேட்டூர் அணை நீர்மட்டம் 51 அடியாக குறைந்தது

Published On 2023-08-30 10:10 IST   |   Update On 2023-08-30 10:10:00 IST
  • நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்தால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தும், குறைந்தும் வந்து கொண்டு இருக்கிறது.
  • அணைக்கு நீர்வரத்தை விட அதிகளவில் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருவதால் நீர்மட்டம் வேகமாக குறைந்து வருகிறது.

மேட்டூர்:

மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு கடந்த ஜூன் மாதம் 12-ந் தேதி முதல் தொடர்ந்து தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. பாசன தேவைக்கு ஏற்றார் போல் அணையில் இருந்து தண்ணீர் அதிகரித்தும், குறைத்தும் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

இதே போல் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பருவ மழை பொய்த்து போனதால் அணைக்கு நீர்வரத்து குறைந்து காணப்பட்டது. இதனால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் வேகமாக குறைந்து வருகிறது.

அவ்வப்போது நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்தால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தும், குறைந்தும் வந்து கொண்டு இருக்கிறது.

அணையின் நீர்மட்டம் குறைந்து வருவதால் காவிரி டெல்டா மாவட்டத்தில் பயிரிட்டுள்ள சுமார் 3 லட்சம் ஏக்கர் குறுவை சாகுபடி முழுமை பெறுமா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

அதே போல் மேட்டூர் கிழக்கு, மேற்கு கால்வாய் மூலம் சேலம், நாமக்கல், ஈரோடு மாவட்டத்தில் சுமார் 45 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்டு 1-ந் தேதி இதற்காக தண்ணீர் திறந்து விடப்படுவது வழக்கம். ஆனால் இந்த ஆண்டில் அணையில் போதிய தண்ணீர் இல்லாததால் மேட்டூர் கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்படவில்லை.

இன்று காலை 8 மணி நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர்மட்டம் 51 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு வெறும் 792 கனஅடி தண்ணீரே வந்து கொண்டு இருக்கிறது. அணையில் இருந்து தொடர்ந்து வினாடிக்கு 10 ஆயிரம் கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. அணையில் தற்போது 18.44 டி.எம்.சி. தண்ணீரே இருப்பு உள்ளது.

அணைக்கு நீர்வரத்தை விட அதிகளவில் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருவதால் நீர்மட்டம் வேகமாக குறைந்து வருகிறது.

Tags:    

Similar News