தமிழ்நாடு

இரட்டை இலையிடம் தாமரை எடுபடாது: ஜெயக்குமார் திட்டவட்டம்

Published On 2024-01-18 03:16 GMT   |   Update On 2024-01-18 03:16 GMT
  • ஜல்லிக்கட்டு ஒரு சனாதன திருவிழா என்று மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் சொல்லியிருக்கிறார்.
  • 2026-ம் ஆண்டில் எம்.ஜி.ஆரின், ஜெயலலிதாவின் புரட்சி ஆட்சி எடப்பாடி பழனிசாமி தலைமையில் மலரும் என்பது தான் விதி.

சென்னை:

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. அலுவலகத்தில் நேற்று முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் நிருபர்களிடம் கூறியதாவது:-

மாபெரும் தலைவரான எம்.ஜி.ஆருக்கு, பிரதமர் மோடி பிறந்தநாள் வாழ்த்து தெரிவிப்பது நல்ல விஷயம்தானே. அதற்கும், கூட்டணிக்கும் சம்பந்தம் இல்லை. இப்போது அல்ல, எப்போதும் இல்லை என்று எடப்பாடி பழனிசாமி தெளிவுபடுத்திவிட்டாரே...

ஜல்லிக்கட்டு ஒரு சனாதன திருவிழா என்று மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் சொல்லியிருக்கிறார். தமிழர்களின் பெருமையே வீரமும், காதலும்தான். வீரத்தின் சின்னம் ஜல்லிக்கட்டு.

அண்ணாமலையை முதலமைச்சராக்க ரஜினிகாந்த் விருப்பப்பட்டதாக துக்ளக் குருமூர்த்தி கூறியிருக்கிறாரே.... இதற்கான பதிலை ரஜினிகாந்த்தான் சொல்ல வேண்டும். ரஜினிகாந்த் எதுவுமே சொல்லாத சூழலில், அவர் சொன்னதாக குருமூர்த்திதான் இதனை கூறியுள்ளார். ரஜினி சொல்லட்டும், அதன்பிறகு நான் சொல்கிறேன். அறையில் நடந்ததை அம்பலத்தில் சொல்லட்டும். நாங்கள் பதில் அளிக்கிறோம். எது எப்படி இருந்தாலும், அது இலவு காத்த கிளி, அது நடக்காத விஷயம். 2026-ம் ஆண்டில் எம்.ஜி.ஆரின், ஜெயலலிதாவின் புரட்சி ஆட்சி எடப்பாடி பழனிசாமி தலைமையில் மலரும் என்பது தான் விதி.

தமிழகத்தில் தாமரையை மலர வைக்க எவ்வளவோ முயற்சிக்கிறார்கள். அது அவர்களது ஆசை. ஆனால் இரட்டை இலை பெரியளவில் துளிர்த்து பசுமையாக காட்சியளிக்கிறது. அதுகிட்ட எதுவுமே எடுபடாது.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News