தமிழ்நாடு

மீஞ்சூர் ஒன்றியத்தில் காலை உணவு திட்டம் துவக்க விழா

Published On 2023-08-25 11:43 GMT   |   Update On 2023-08-25 11:43 GMT
  • தேரடி ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளியில் அதற்கான திட்டம் தொடக்க விழா நடைபெற்றது.
  • பொன்னேரி எம்எல்ஏ துரை சந்திரசேகர் கலந்து கொண்டு மாணவர்களுக்கு திட்டத்தை துவக்கி வைத்தார்.

பொன்னேரி:

தமிழக முதலமைச்சரின் காலை உணவு திட்டம் தமிழகம் முழுவதும் தொடங்கி வைத்ததையொட்டி அதன் தொடர்ச்சியாக மீஞ்சூர் தேரடி ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளியில் அதற்கான திட்டம் தொடக்க விழா நடை பெற்றது.

இதில் பொன்னேரி எம்எல்ஏ துரை சந்திரசேகர் கலந்து கொண்டு மாணவர்களுக்கு திட்டத்தை துவக்கி வைத்தார் இதில் கூடுதல் ஆட்சியர், சுபபுத்திரா சப் கலெக்டர் ஐஸ்வர்யா வட்டார வளர்ச்சி அலுவலர் சந்திரசேகர், பேரூராட்சித் தலைவர் ருக்குமணி மோகன்ராஜ், துணைத் தலைவர் அலெக்சாண்டர், திமுக கிழக்கு ஒன்றிய செயலாளர் ரமேஷ் ராஜ், நகர செயலாளர் தமிழ் உதயன், முன்னாள் பேரூர் தலைவர் சுப்பிரமணி, காங்கிரஸ் வட்டாரத் தலைவர் புருஷோத்தமன் மற்றும் பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.

இதேபோன்று அத்திப்பட்டு ஊராட்சியில் சேர்மன் ரவி சிறுளப்பாக்கம் ஊராட்சி பெரிய வெப்பத்தூர் துவக்க பள்ளியில் ஊராட்சி மன்ற தலைவர் உஷா கணேசன், வல்லூரில் தலைவர் உஷா ஜெயகுமார், சீமாபுரம் ஊராட்சியில் தலைவர் நர்மதா யோகேஷ் குமார், தடப் பெரும்பாக்கம் ஊராட்சியில் தலைவர் பாபு, நந்தியம்பாக்கம் ஊராட்சியில் தலைவர் கலாவதி நாகராஜன், ஆகியோர் காலை உணவு திட்டத்தை துவக்கி வைத்தனர்.

Tags:    

Similar News