தமிழ்நாடு செய்திகள்

ராயபுரத்தில் ஆட்டோவில் மூதாட்டி தவற விட்ட ரூ.80 ஆயிரத்தை போலீசில் ஒப்படைத்த டிரைவர்

Published On 2023-04-24 13:58 IST   |   Update On 2023-04-24 13:58:00 IST
  • மகள் வீட்டுக்கு சென்றதும் பார்த்தபோது ரூ. 80 ஆயிரம் இருந்த பணப்பை மாயமாகி இருந்தது.
  • விசாரணையில் அந்த பணப்பை மும்தாஜ் தவற விட்டு இருப்பது தெரியவந்தது.

திருவொற்றியூர்:

ராயபுரம் உசேன் மேஸ்திரி தெருவை சேர்ந்தவர் மும்தாஜ் பேகம் (வயது 67). இவர்,சேக் மேஸ்திரி பகுதியில் உள்ள மகள் வீட்டிற்கு ஆட்டோவில் சென்றார்.

அப்போது ரூ.80 ஆயிரம் ரொக்கத்தையும் எடுத்து சென்றார்.

மகள் வீட்டுக்கு சென்றதும் பார்த்தபோது ரூ. 80 ஆயிரம் இருந்த பணப்பை மாயமாகி இருந்தது. அதனை ஆட்டோவிலேயே தவறவிட்டது தெரியவந்தது.

இது குறித்து ராயபுரம் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் கண்காணிப்பு கேமிரா காட்சி பதிவுகளை வைத்து விசாரணை நடத்தி வந்தனர்.

இதற்கிடையே திருவொற்றியூர் டோல்கேட் பகுதியை சேர்ந்த ஆட்டோ டிரைவர் பிரகாஷ் (35) என்பவர் தனது ஆட்டோவில் பயணம் செய்த மூதாட்டி ஒருவர் ரூ.80 ஆயிரம் பணப்பையை தவற விட்டுவிட்டதாக போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தார்.

விசாரணையில் அந்த பணப்பை மும்தாஜ் தவற விட்டு இருப்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து மும்தாஜை போலீசார் வரவழைத்து ரூ.80ஆயிரத்தை ஒப்படைத்தனர். மேலும் பயணி தவறவிட்ட பணத்தை நேர்மையாக போலீசில் ஒப்படைத்த ஆட்டோ டிரைவர் பிரகாசை ராயபுரம் போலீஸ் உதவி கமிஷனர் லட்சுமணன், இன்ஸ்பெக்டர் அருள்செல்வன் ஆகியோர் பாராட்டி பரிசு வழங்கினர்.

Tags:    

Similar News