தமிழ்நாடு செய்திகள்

சென்னையில் பல்வேறு பகுதிகளில் வெளுத்து வாங்கும் கனமழை

Published On 2024-08-30 20:36 IST   |   Update On 2024-08-30 20:36:00 IST
  • வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, தற்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றது.
  • சென்னை புறநகர் பகுதிகளான குன்றத்தூர், மாங்காடு உள்ளிட்ட பகுதிகளிலும் கனமழை.

மத்திய மற்றும் அதையொட்டிய வடக்கு வங்கக் கடலில் புதிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது. நேற்று வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, தற்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றது.

இதன் எதிரொலியால், தமிழகத்தில் 13 மாவட்டங்களில் மழை பெய்யும் எனவும், சென்னையை பொறுத்தவரையில் நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது

அதன்படி, சென்னை அண்ணாசாலை, கோயம்பேடு, மதுரவாயல், வளசரவாக்கம், எழும்பூர், கோடம்பாக்கம், நுங்கம்பாக்கம், போரூர், வானகரம், முகப்பேர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.

மயிலாப்பூர், மந்தைவெளி, அடையாறு,பட்டினம்பாக்கம், திருவொற்றியூர், எண்ணூர், புதுவண்ணாரப்பேட்டை, காசிமேடு, ராயபுரம் உள்ளிட்ட பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது.

சென்னை புறநகர் பகுதிகளான குன்றத்தூர், மாங்காடு, பூவிருந்தவல்லி, ஐயப்பந்தாங்கல், திருவேற்காடு உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.

அதபோல், வண்டலூர், சேலையூர், குரோம்பேட்டை, பெருங்களத்தூர், கூடுவாஞ்சேரி மற்றும் ஊரப்பாக்கம் பகுதிகளில் மிதமான மழை பெய்து வருகிறது.

Tags:    

Similar News