தமிழ்நாடு செய்திகள்

மதுரை காக்காதோப்பு பகுதியில் பழமையான 2 மாடி கட்டிடம் இடிந்து கிடக்கும் காட்சி.

மதுரையில் தொடர்மழை காரணமாக பழமையான 2 மாடி கட்டிடம் இடிந்து விழுந்து தரைமட்டம்

Published On 2023-11-07 15:45 IST   |   Update On 2023-11-07 15:45:00 IST
  • வீட்டின் உரிமையாளர்கள் வெளிநாட்டில் வசிப்பதால் பல மாதங்களாக வீட்டில் யாரும் வசிக்காமல் வீடு பூட்டப்பட்ட நிலையில் இருந்தது.
  • எப்போதும் ஆள் நடமாட்டம் உள்ள அந்த பகுதியில் யாரும் செல்லாததால் உயிர்சேதம் எதுவும் ஏற்படவில்லை.

மதுரை:

மதுரை நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் விடிய விடிய பெய்த பலத்த மழையால் பல்வேறு இடங்களில் மழை தண்ணீர் சாலைகளிலும், முக்கிய பகுதிகளிலும் சூழ்ந்து காணப்பட்டது. இன்று அதிகாலை வரை தொடர்ந்து மழை நீடித்ததால் பல்வேறு இடங்களில் போக்குவரத்து பாதிக்கப்பட்டன.

இதற்கிடைய தொடர் மழை காரணமாக மதுரையின் முக்கிய பகுதியான காக்காதோப்பு பகுதியில் பழமையான 2 மாடிகள் கொண்ட கட்டிடம் இடிந்து விழுந்து தரைமட்டமானது. அந்த வீட்டின் உரிமையாளர்கள் வெளிநாட்டில் வசிப்பதால் பல மாதங்களாக வீட்டில் யாரும் வசிக்காமல் வீடு பூட்டப்பட்ட நிலையில் இருந்தது.

இந்த நிலையில் மழை காரணமாக அந்த வீடு இடிந்து விழுந்து தரைமட்டமானது, நள்ளிரவு நேரத்தில் இந்த விபத்து ஏற்பட்டதாலும், எப்போதும் ஆள் நடமாட்டம் உள்ள அந்த பகுதியில் யாரும் செல்லாததாலும் உயிர்சேதம் எதுவும் ஏற்படவில்லை.

தகவல் அறிந்ததும் திலகர் திடல் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும் கட்டிட இடிபாட்டுக்குள் யாரும் சிக்கி உள்ளார்களா என்று தீயணைப்பு மற்றும் மீட்பு படையினரும் அங்கு சென்று தேடுதல் பணியில் ஈடுபட்டனர். ஆனாலும் அதிர்ஷ்டவசமாக யாரும் சிக்கவில்லை என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முக்கிய பகுதியில் பழமையான 2 மாடிக்கட்டிடம் இடிந்து விழுந்து தரைமட்டமானது மதுரையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

Tags:    

Similar News