தமிழ்நாடு செய்திகள்

பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை: வேன் டிரைவர் கைது

Published On 2023-09-21 09:55 IST   |   Update On 2023-09-21 09:55:00 IST
  • குமார் மதுராந்தகத்தில் உள்ள தனியார் பள்ளியில் வேன் டிரைவராக வேலை செய்து வருகிறார்.
  • போலீசார் குமாரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

மதுராந்தகம்:

மதுராந்தகத்தை அடுத்த வள்ளுவப்பாக்கம் ஏரிக்கரை தெருவை சேர்ந்தவர் எபி என்ற குமார் (வயது 32). மதுராந்தகத்தில் உள்ள தனியார் பள்ளியில் வேன் டிரைவராக வேலை செய்து வருகிறார். கடந்த ஜூலை மாதம் அந்த பள்ளியில் படிக்கும் 10-ம் வகுப்பு மாணவி ஒருவருக்கு பிறந்தநாள் என்பதால் அவருக்கு பிறந்த நாள் பரிசு தருவதாக கூறி அதே ஊரில் உள்ள செல்லியம்மன் கோவிலுக்கு அருகே அழைத்துள்ளார். அங்கு வந்த மாணவிக்கு குமார் பாலியல் தொந்தரவு செய்ததாக தெரிகிறது.

இதுகுறித்து யாரிடமாவது சொன்னால் உனது குடும்பத்தை காலி செய்து விடுவேன், உனது புகைப்படத்தை இணையதளத்தில் வெளியிட்டு விடுவேன் என்று மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.

இது குறித்து மேல்மருவத்தூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதன் பேரில் போலீசார் குமாரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

Tags:    

Similar News