தமிழ்நாடு

முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு ஜாமின்- உச்சநீதிமன்றம் உத்தரவு

Published On 2023-10-13 08:33 GMT   |   Update On 2023-10-14 10:04 GMT
  • ராஜேந்திர பாலாஜிக்கு நிபந்தனை தளர்த்தி ஜாமின் வழங்கி உத்தரவு.
  • மோசடி தொடர்பான புகாரை லஞ்ச ஒழிப்புத்துறை விசாரிக்கும் என தமிழக அரசு தகவல்.

ஆவின் நிறுவனத்தில் வேலை வாங்கி தருவதாக ரூ.3 கோடி அளவில் மோசடி செய்ததாக வழக்கு தொடரப்பட்டது.

இதைதொடர்ந்து, ராஜேந்திர பாலாஜி சார்பில் உச்ச நீதிமன்றத்தில் ஜாமின் வழங்க கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு மீதான விசாரணை உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு நிபந்தனை தளர்த்தி ஜாமின் வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அதன்படி, அமைச்சர் ராஜேந்திர பாலாஜி வெளி மாநிலங்கள் செல்லும்போது சென்னை உயர்நீதிமன்றத்தை நாடி அனுமதி பெற வேண்டும் என்ற நிபந்தனையையும் தளர்த்தி ஜாமின் வழங்கி உத்தரவிடப்பட்டுள்ளது.

ஆனால், வெளிநாடு செல்லும்போது சென்னை உயர்நீதிமன்றத்தை நாடி அனுமதி பெற வேண்டும் என்ற நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே, ஆவினில் வேலை வாங்கி தருவதாக மோசடி தொடர்பான புகாரை லஞ்ச ஒழிப்புத்துறை விசாரிக்கும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

Tags:    

Similar News