தமிழ்நாடு

ஈரோடு இடைத்தேர்தல்- ஓ.பன்னீர்செல்வம் தரப்பு வேட்பாளர் செந்தில்முருகன் வாபஸ்

Published On 2023-02-06 08:01 GMT   |   Update On 2023-02-06 11:20 GMT
  • அ.தி.மு.க.வில் 2,750 பொதுக்குழு உறுப்பினர்கள் இருக்கின்றனர்.
  • ஈரோடு இடைத்தேர்தலில் இரட்டை இலை சின்னம் வெற்றி பெற பிரசாரம் செய்வோம்.

ஈரோடு:

ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு உள்ளது. முன்னாள் எம்.எல்.ஏ. கே.எஸ்.தென்னரசுவை எடப்பாடி பழனிசாமியும், எம்.பி.ஏ. பட்டதாரியான செந்தில் முருகனை ஓ.பன்னீர்செல்வமும் வேட்பாளராக அறிவித்தனர்.

இதனால், யாருக்கு இரட்டை இலை சின்னம் கிடைக்கும் என்ற கேள்வி எழுந்தது. இந்த நிலையில் இரட்டை இலை சின்னத்தை தங்களுக்கு ஒதுக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டில் எடப்பாடி பழனிசாமி வழக்கு தொடுத்தார்.

இந்த வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, அ.தி.மு.க. பொதுக்குழு மூலமாகவே வேட்பாளரை தேர்வு செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தியது. மேலும், இந்த பொதுக்குழுவில் ஓ.பன்னீர்செல்வம் அணியை பங்கேற்க செய்ய வேண்டும் என்றும் கூறியது.

தற்போது, அ.தி.மு.க.வில் 2,750 பொதுக்குழு உறுப்பினர்கள் இருக்கின்றனர். இவர்களில், 2,662 பேர் எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளர்கள். மீதமுள்ள 148 பேர் மட்டுமே ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்களாக உள்ளனர்.

இந்நிலையில் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் ஓ.பன்னீர்செல்வம் தரப்பு வேட்பாளர் செந்தில்முருகன் வாபஸ் பெற்றுள்ளார்.

இதுதொடர்பாக ஓ.பன்னீர்செல்வம் தரப்பு ஆதரவாளர் கு.ப.கிருஷ்ணன் கூறியதாவது:

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் ஓ.பன்னீர்செல்வம் தரப்பு வேட்பாளர் செந்தில்முருகன் வாபஸ் பெற்றுள்ளார். இரட்டை இலை சின்னம் முடக்கப்பட கூடாது என்பதற்காக வேட்பாளரை வாபஸ் பெற்றுள்ளோம்.

எங்கள் நோக்கம் இரட்டை இலை சின்னம் முடங்க கூடாது என்பதுதான். ஈரோடு இடைத்தேர்தலில் இரட்டை இலை சின்னம் வெற்றி பெற பிரசாரம் செய்வோம் என்றும் அவர் கூறினார்.

Tags:    

Similar News