தமிழ்நாடு செய்திகள்
புதிய கட்டளை மேட்டு கால்வாய், உய்யகொண்டான் நீட்டிப்பு கால்வாய்களை திறந்துவிட இபிஎஸ் வலியுறுத்தல்
- காவிரியில் 1 லட்சம் கன அடிக்கும் மேலாக தண்ணீர் வரத்து உள்ளது.
- விரைவில் உபரி நீர் கடலில் கலக்கும் சூழ்நிலை ஏற்படக்கூடிய வாய்ப்பு உள்ளது.
சென்னை:
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் தளத்தில்,
மேட்டூர் அணையில் தண்ணீர் இருப்பு அதிகரித்து வரும் நிலையில், தொடர்ந்து காவிரியில் 1 லட்சம் கன அடிக்கும் மேலாக தண்ணீர் வரத்து உள்ளது. எனவே விரைவில் உபரி நீர் கடலில் கலக்கும் சூழ்நிலை ஏற்படக்கூடிய வாய்ப்பு உள்ளது.
இந்நிலையில் கல்லணையில் இருந்து இன்று காலை தண்ணீர் திறந்துவிடப்படும் சூழ்நிலையில், கல்லணை தலைப்பில் உள்ள பூதலூர் தாலூக்காவின் செங்கிப்பட்டி பகுதியில் உள்ள 165 ஏரிகளை நிரப்பிட மாயனூரில் இருந்து புதிய கட்டளை மேட்டுக்கால்வாய் மற்றும் உய்யகொண்டான் நீட்டிப்பு கால்வாய்களில் உடனடியாக தண்ணீர் திறந்துவிட்டு 165 ஏரிகள் உட்பட, அப்பகுதியில் உள்ள நீர்நிலைகளை நிரப்பிட உடனடியாக நடவடிக்கை எடுக்க விடியா திமுக அரசை வலியுறுத்துகிறேன் என்று தெரிவித்துள்ளார்.