முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து பேசினார் அமைச்சர் பொன்முடி- லைவ் அப்டேட்ஸ்
பொன்முடி வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருவதற்கு காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கண்டனம் தெரிவித்துள்ளார்
ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் போடப்பட்ட பொய் வழக்கு. வட மாநிலங்களில் செய்தது போல, தமிழ்நாட்டிலும் அமலாக்கத்துறை மூலம் பா.ஜ.க. அதன் நடவடிக்கையை தொடங்கி உள்ளது என தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
விழுப்புரத்தில் உள்ள வீட்டில் சோதனை நடத்தப்பட்டு வரும் நிலையில், பொன்முடி ஆதரவு வக்கீல்கள் வீட்டின் முன் குவிந்துள்ளனர்
பொன்முடியின் காரில் ஆவணங்கள் ஏதாவது உள்ளதா? என காரில் அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
அளவுக்கு அதிகமாக செம்மண் அள்ளியது தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு வரவிருக்கும் நிலையில் சோதனை
துப்பாக்கி ஏந்திய மத்திய ரிசர்வ் பாதுகாப்புப்படை வீரர்கள் பாதுகாப்புடன் சோதனை நடைபெற்று வருகிறது.
எதிர்க்கட்சிகளை அச்சுறுத்துவதற்காகவே தொடர்ந்து சோதனை- முத்தரசன் குற்றச்சாட்டு
வெளிநாடுகளில் முதலீடு தொடர்பாக அமைச்சர் பொன்முடி மகன் கௌதம சிகாமணியில் ரூ.8.6 கோடி மதிப்பிலான சொத்துக்களை ஏற்கனவே அமலாக்கத்துறை முடக்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.
2012ல் பதிவு செய்த வழக்கின் அடிப்படையில் 11 ஆண்டுகளுக்கு பிறகு அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
2006-11ம் ஆண்டு காலகட்டத்தில் கனிம வளத்துறை அமைச்சராக பொன்முடி இருந்தார். அவர் அமைச்சராக இருந்தபோது அரசுக்கு 28 கோடி ரூபாய் இழப்பு ஏற்படுத்தியதாக 2012ம் ஆண்டு வழக்கு தொடரப்பட்டது.