முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து பேசினார் அமைச்சர் பொன்முடி- லைவ் அப்டேட்ஸ்
விழுப்புரத்தில் அமைச்சர் பொன்முடி வீட்டில் அமலாக்கத்துறை நடத்திய 16 மணி நேர சோதனை நிறைவு
நுங்கம்பாக்கம் அமலாக்கத்துறை அலுவலகத்துக்கு அமைச்சர் பொன்முடியின் ஆடிட்டர்கள் வருகை
அமலாக்கத்துறை அலுவலகத்தில் வைத்து அமைச்சர் பொன்முடியிடம் விசாரணை நடத்தப்பட்டது. பின்னர் அவரிடம் வாக்குமூலம் பெற்றனர்.
சென்னையில் நடந்த சோதனைக்குப்பிறகு சைதாப்பேட்டை வீட்டில் வைத்து அமைச்சர் பொன்முடியிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். முதற்கட்ட விசாரணைக்கு பிறகு மேல் விசாரணைக்காக நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர். அவரது மகன் பொன் கவுதம சிகாமணியும் சென்றுள்ளார்.
அமைச்சர் பொன்முடியின் வீட்டில் இருந்து கணக்கில் காட்டப்படாத 70 லட்சம் ரூபாய் ரொக்கப்பணத்தை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைப்பற்றினர். ரூ.10 லட்சம் மதிப்பிலான வெளிநாட்டு கரன்சிகளும் கைப்பற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது.
வங்கி பரிவர்த்தனை, பணப் பரிமாற்றம் தொடர்பாக வங்கி அதிகாரிகளை நேரில் வரவழைத்து விசாரணை நடத்த அமலாக்கத்துறை அதிகாரிகள் முடிவு செய்தனர். அதன்படி, பொன்முடியின் வீட்டுக்கு இந்தியன் வங்கி அதிகாரிகள் வந்தனர்.
விழுப்புரத்தில் அமைச்சர் பொன்முடியின் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையின்போது அவர்களிடம் திமுகவினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதிகாரிகள் காரில் இருந்து மூன்று பைகளை பொன்முடியின் வீட்டிற்குள் எடுத்து சென்றனர். இதற்கு ஆட்சேபம் தெரிவித்த திமுகவினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.