தமிழ்நாடு செய்திகள்

மயிலாடுதுறை தொகுதிக்கான காங்கிரஸ் வேட்பாளர் அறிவிப்பு

Published On 2024-03-26 21:14 IST   |   Update On 2024-03-26 21:14:00 IST
  • தமிழகத்தில் 8 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ் வெளியிட்டது.
  • மயிலாடுதுறை தொகுதிக்கான காங்கிரஸ் வேட்பாளர் அறிவிக்கப்படாமல் இருந்தது.

மக்களவை தேர்தலில் தமிழகத்தில் திமுகவுடன் கூட்டணியில் காங்கிரஸ் 9 தொகுதிகளில் போட்டியிடுகிறது.

இதில், ஏற்கனவே தமிழகத்தில் 8 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ் வெளியிட்டது.

அதன்படி, திருவள்ளூர் (தனி)- சசிகாந்த் செந்தில், கிருஷ்ணகிரி- கே. கோபிநாத், கரூர்- ஜோதிமணி, கடலூர்- எம்.கே. விஷ்னு பிரசாத், சிவகங்கை- கார்த்தி சிதம்பரம், விருதுநகர்- மாணிக்கம் தாகூர், கன்னியாகுமரி- விஜய் வசந்த்,

நெல்லை - ராபர்ட் ப்ரூஸ் போட்டியிடுவதாக அறிவித்தார்.

விளவங்கோடு இடைத்தேர்தலில் காங்கிரஸ் சார்பில் தாரகை கத்பட் போட்டியிடுகிறார்.

ஆனால், மயிலாடுதுறை தொகுதிக்கான காங்கிரஸ் வேட்பாளர் அறிவிக்கப்படாமல் இருந்தது.

இந்நிலையில், மயிலாடுதுறை தொகுதிக்கான காங்கிரஸ் வேட்பாளர் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, மயிலாகுதுறை தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக வழங்கறிஞர் ஆர்.சுதா போட்டியிடுகிறார்.

வேட்புமனு தாக்கலுக்கு நாளை கடைசி நாள் என்ற நிலையில், காங்கிரஸ் வேட்பாளர் அறிவிக்கப்பட்டுள்ளது. வேட்பாளர் ஆர்.சுதா நாளை மனுதாக்கல் செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Tags:    

Similar News