தமிழ்நாடு

முன்னாள் பிரதமர் வி.பி.சிங் சிலையை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

Published On 2023-11-27 06:14 GMT   |   Update On 2023-11-27 06:14 GMT
  • சென்னை மாநிலக் கல்லூரி வளாகத்தில் ரூ.52 லட்சம் செலவில் தமிழக அரசின் சார்பில் சிலை அமைக்கப்பட்டுள்ளது.
  • சிலை திறப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக உ.பி. முன்னாள் முதலமைச்சர் அகிலேஷ் யாதவ் கலந்து கொண்டார்.

சென்னை:

பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு இடஒதுக்கீடு வழங்குவதற்காக பி.பி. மண்டல் தலைமையில் இரண்டாவது பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தால் சமூக ரீதியாகவும், கல்வியிலும் பின்தங்கிய பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் என்று அழைக்கப்படும் சமூகத்திற்கு அரசுப் பணியிடங்களில் 27 சதவீத இட ஒதுக்கீட்டை வழங்கலாம் என்ற பரிந்துரையை செயல்படுத்திய சமூக நீதிக் காவலர் வி.பி.சிங்.

இத்தகைய சிறப்புமிக்க முன்னாள் பிரதமர் சமூக நீதி காவலர் வி.பி.சிங் புகழுக்கு பெருமை சேர்க்கும் வகையில் அவருக்கு சென்னை மாநிலக் கல்லூரி வளாகத்தில் ரூ.52 லட்சம் செலவில் தமிழக அரசின் சார்பில் சிலை அமைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் முன்னாள் பிரதமர் வி.பி.சிங் சிலை திறப்பு விழா இன்று காலை நடைபெற்றது. சென்னை மாநில கல்லூரி வளாகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னாள் பிரதமர் வி.பி.சிங் சிலையை திறந்து வைத்தார்.

சிலை திறப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக உத்தரபிரதேச மாநில முன்னாள் முதலமைச்சர் அகிலேஷ் யாதவ் மற்றும் அமைச்சர்கள், பாராளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News