தமிழ்நாடு

தமிழ்நாடு அரசின் விருதுகளை வழங்கி சிறப்பித்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

Published On 2024-01-13 13:16 GMT   |   Update On 2024-01-13 13:16 GMT
  • 2023ம் ஆண்டின் சமூக நீதிக்கான தந்தை பெரியார் மற்றும் டாக்டர் அம்பேத்கர் விருதுகள்.
  • விருதாளர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று விருதுகளை வழங்கி கவுரவித்தார்.

தமிழக அரசு சார்பில், 2023ம் ஆண்டுக்கான தந்தை பெரியார் விருது மற்றும் அம்பேத்கர் விருது நேற்று அறிவிக்கப்பட்டது.

அதன்படி, 2023ம் ஆண்டின் சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருதுக்கு சமூக நீதி கண்காணிப்புக் குழு தலைவர் சுப.வீரபாண்டியன் தேர்வு செய்யப்பட்டார்.

2023ம் ஆண்டிற்கான டாக்டர் அம்பேத்கர் விருதுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த பி. சண்முகம் தேர்வு செய்து தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

இந்நிலையில், விருதாளர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று விருதுகளை வழங்கி கவுரவித்தார். 

2023ம் ஆண்டின் சமூக நீதிக்கான தந்தை பெரியார் மற்றும் டாக்டர் அம்பேத்கர் விருதுகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கி கவுரவித்தார்.

தொடர்ந்து, 2024-ம் ஆண்டுக்கான திருவள்ளுவர் விருது உள்ளிட்ட விருதுகளும் வழங்கப்பட்டன. அதன்படி, பத்தமடை பரமசிவத்திற்கு பேரறிஞர் அண்ணா விருது, உ.பலராமனுக்கு பெருந்தலைவர் காமராசர் விருது, கவிஞர் பழநிபாரதிக்கு மகாகவி பாரதியார் விருது, எழுச்சிக் கவிஞர் முத்தரசுக்கு பாவேந்தர் பாரதிதாசன் விருது, ஜெயசீல ஸ்டீபனுக்கு திரு.வி.க. விருது, முனைவர் இரா.கருணாநிதிக்கு கி.ஆ.பெ.விசுவநாதம் விருதும் வழங்கி கவுரவித்தார்.

விருது பெறும் விருதாளர்கள் ஒவ்வொருவருக்கும் ரூ.2 லட்சம் தொகை, ஒரு சவரன் தங்கப் பதக்கம் மற்றும் தகுதியுரை வழங்கப்பட்டது.

Tags:    

Similar News