தமிழ்நாடு செய்திகள்

ஒகேனக்கல்லில் புகுந்த காட்டுயானைகளை விரட்டும்போது வனத்துறையினரை மிரட்டிய 8 பேர் மீது வழக்கு

Published On 2023-08-08 12:08 IST   |   Update On 2023-08-08 12:08:00 IST
  • திடீரென்று அங்கு வந்த கிராம மக்கள் வண்டியை சிலர் வழி மறித்தனர்.
  • வனகாப்பாளர் ரகுராமன் ஒகேனக்கல் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார்.

தருமபுரி:

தருமபுரி மாவட்டம், பென்னாகரம் பகுதியில் 3 காட்டு யானைகள் வனத்துறையினருக்கு உலா வருவதாக தகவல் கிடைத்தது.

உடனே மாவட்ட வனசரக வனகாப்பாளர் ரகுராமன் (வயது35) தலைமையில் பிரதிவ்ராஜ், ராமலிங்கம், அய்யண்ணன், ராஜபதி, செல்வம் ஆகிய வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது வனத்துறையினர் பென்னாகரம் அருகே தேவனூரை அடுத்த பூதிபட்டி பிரிவு சாலையில் ஜீப்பில் ரோந்து சென்றபோது திடீரென்று அங்கு வந்த கிராம மக்கள் வண்டியை சிலர் வழி மறித்தனர்.

அப்போது கிராம மக்கள், மீண்டும் இந்த பகுதியில் யானைகள் வந்தால், அந்த யானைகளை சுட்டு கொல்லுவோம் அல்லது மின்சாரம் பாய்ச்சி கொல்லுவோம் என்றும், வனத்துறையினரை ஆபாசமாக திட்டியும், மிரட்டல் விடுத்தனர்.

இதுகுறித்து வனகாப்பாளர் ரகுராமன் ஒகேனக்கல் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். புகாரின் போலீசார் வனத்துறையினரை மிரட்டியதாக பூதிபட்டியைச் சேர்ந்த அல்லிமுத்து (50), ராம சந்திரன் (45) உள்பட 8 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News