தமிழ்நாடு செய்திகள்

பா.ஜ.க. போட்ட கண்டிஷன்.... அதுதான் கூட்டணி முறிவுக்கு காரணம்.... கே.சி.கருப்பணன் பரபரப்பு பேச்சு

Published On 2023-09-30 10:00 IST   |   Update On 2023-09-30 10:00:00 IST
  • சின்ன பையன் அண்ணாமலை மறைந்த முன்னாள் முதலமைச்சர்களை இழிவாக பேசினார்.
  • இனிமேல் எந்த நிலையிலும் பா.ஜனதா கட்சியுடன் அ.தி.மு.க. ஒரு போதும் கூட்டணிக்கு போகாது.

அம்மாபேட்டை:

ஈரோடு மாவட்டம் பவானி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அம்மாபேட்டை ஒன்றியம் குருவரெட்டியூர் பகுதியில் அண்ணாவின் 115 -வது பிறந்த நாள் விழாவையொட்டி அம்மாபேட்டை ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் பிறந்தநாள் விழா பொதுக் கூட்டம் நடைபெற்றது.

சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட முன்னாள் அமைச்சர் கே.சி.கருப்பணன் எம்.எல்.ஏ. கூட்டத்தில் பேசினார்.

2026-ம் ஆண்டு நடைபெறும் சட்டமன்றத் தேர்தலில் அண்ணாமலையை முதலமைச்சராக வேண்டும் பா.ஜனதா வற்புறுத்தியதால் தான் அ.தி.மு.க-பா.ஜனதா கூட்டணி முறிவு ஏற்பட்டது. இந்த முடிவிற்கு தமிழக முழுவதும் அ.தி.மு.க. மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.

கொரோனா காலகட்டத்திலேயே பல லட்ச ரூபாய் நிதி உதவி மத்திய அரசிடம் இருந்து கிடைத்திருந்தாலும் கூட அதற்காக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பலமுறை பொறுத்து போனார்.

ஆனால் அதையும் பொருட்படுத்தாமல் தற்போது எடப்பாடி பழனிசாமியின் அரசியல் வாழ்க்கையின் வயது கூட இல்லாத சின்ன பையன் அண்ணாமலை மறைந்த முன்னாள் முதலமைச்சர்கள் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா மற்றும் அண்ணா ஆகியோர் பற்றி இழிவாக பேசினார்.

இனிமேல் எந்த நிலையிலும் பா.ஜனதா கட்சியுடன் அ.தி.மு.க. ஒரு போதும் கூட்டணிக்கு போகாது.

இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டணி முறிவு குறித்து அ.தி.மு.க. மற்றும் பா.ஜனதா கட்சியினர் கருத்து கூறாத நிலையில் முன்னாள் அமைச்சர் கே.சி.கருப்பணன் தற்போது கூறிய கருத்து இரு கட்சிகளுக்கும் இடையே மீண்டும் புகைச்சலை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News