தமிழ்நாடு

பட்டியல் தயாரிப்பில் பாரதிய ஜனதா தீவிரம்: மாத இறுதிக்குள் முடிக்க அண்ணாமலை திட்டம்

Published On 2024-01-22 04:53 GMT   |   Update On 2024-01-22 05:31 GMT
  • தேர்தலை சந்திப்பதற்கான அடுத்த கட்ட பணிகளை அண்ணாமலை தொடங்கி இருக்கிறார்.
  • ஒவ்வொரு தொகுதிக்கும் 3 பேர் வீதம் வேட்பாளர் பட்டியலை தயார் செய்து இந்த மாத இறுதிக்குள் அனுப்பி வைக்கும்படி மாவட்ட தலைவர்களை கேட்டுக் கொண்டுள்ளார்.

சென்னை:

தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தலை சந்திக்க பாரதிய ஜனதா தயாராகி வருகிறது. கூட்டணியில் இருந்த அ.தி.மு.க. வெளியேறிவிட்ட நிலையில் பா.ஜனதா தனித்தே நிற்கிறது.

பா.ம.க., தே.மு.தி.க., அ.ம.மு.க., த.மா.கா. ஆகிய கட்சிகளுடன் கூட்டணி அமைப்பதற்கு முயற்சிகள் நடந்தது. ஆனால் இந்த கட்சிகள் இதுவரை தங்கள் நிலைப்பாட்டை அறிவிக்கவில்லை.

இந்நிலையில் தேர்தலை சந்திப்பதற்கான அடுத்த கட்ட பணிகளை அண்ணாமலை தொடங்கி இருக்கிறார். தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளிலும் தகுதியானவர்களை தேர்வு செய்யும்படி கேட்டுக் கொண்டுள்ளார்.

கட்சிக்காக உழைத்து மக்கள் மத்தியில் செல்வாக்குடனும், தொண்டர்கள் பின்புலத்துடனும் இருப்பவர்களை தேர்வு செய்து ஒவ்வொரு தொகுதிக்கும் 3 பேர் வீதம் வேட்பாளர் பட்டியலை தயார் செய்து இந்த மாத இறுதிக்குள் அனுப்பி வைக்கும்படி மாவட்ட தலைவர்களை கேட்டுக் கொண்டுள்ளார்.

இந்த மாத இறுதியில் பா.ஜனதா தலைவர் நட்டா தமிழகம் வருகிறார். அதற்குள் பட்டியலை தயார் செய்து அவரிடம் வழங்க திட்டமிட்டுள்ளனர்.

இந்நிலையில் நேற்று மதுரையில் பிரதமர் மோடியை தேனி எம்.பி.யும், ஓ.பன்னீர்செல்வத்தின் மகனுமான ரவீந்திரநாத் சந்தித்து பேசினார். தேனி தொகுதியில் மீண்டும் போட்டியிடவும் அதற்கு பா.ஜனதா ஆதரவை கோரியிருப்பதாகவும் கூறப்படுகிறது.

Tags:    

Similar News