தமிழ்நாடு செய்திகள்

மருத்துவமனையில் இருந்து புறப்பட்டது ஆம்ஸ்ட்ராங் உடல்

Published On 2024-07-06 22:10 IST   |   Update On 2024-07-06 22:10:00 IST
  • ஆம்ஸ்ட்ராங் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
  • குடும்பத்தினரை தவிர வேறு யாருக்கும், ஆம்ஸ்ட்ராங்கின் இல்லத்திற்கு வர அனுமதியில்லை.

பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங், சென்னை பெரம்பூரில் உள்ள அவரது வீட்டின் அருகே நின்றுகொண்டிருந்தபோது, இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம கும்பல் ஆம்ஸ்ட்ராங்கை அரிவாளால் சரமாரியாக வெட்டி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில், 8 பேர் கைது செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில், பிரேத பரிசோதனைக்கு பிறகு ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் இருந்து ஆம்ஸ்ட்ராங் உடல் உறவினர்களிடம் இன்று இரவு ஒப்படைக்கப்பட்டுள்ளது.

அதன்படி, ஆம்ஸ்ட்ராங்கின் உடல் மருத்துவமனையில் இருந்து வீட்டிற்கு எடுத்துச் செல்லப்படுகிறது.

சென்னை அயனாவரத்தில் உள்ள ஆம்ஸ்ட்ராங்கின் உடல் ஏற்றப்பட்ட வாகனம் அவரது இல்லத்திற்கு புறப்பட்டது.

நாளை காலை 9 மணிக்கு நீதிமன்றம் அளிக்கும் தீர்ப்பை பொறுத்து ஆம்ஸ்ட்ராங் உடல் அடக்கம் நடைபெறும் என பூவை ஜெகன் மூர்த்தி தெரிவித்துள்ளார்.

குடும்பத்தினரை தவிர வேறு யாருக்கும், ஆம்ஸ்ட்ராங்கின் இல்லத்திற்கு வர அனுமதியில்லை என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Tags:    

Similar News