தமிழ்நாடு

ஒரே நாளில் 20 மாவட்டங்களில் 1,021 டாக்டர்கள் பணி நியமனம்- அமைச்சர் மா.சுப்பிரமணியன் வழங்கினார்

Published On 2024-02-06 07:25 GMT   |   Update On 2024-02-06 07:27 GMT
  • மருத்துவர் பணியிடங்களை நிரப்புவதற்காக தேர்வுத் துறை மூலம் 1,021 புதிய டாக்டர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.
  • டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக் கழக கூட்ட அரங்கில் நடந்தது.

சென்னை:

தமிழகத்தில் மருத்துவத் துறையில் காலியாக உள்ள மருத்துவர் பணியிடங்களை நிரப்புவதற்காக தேர்வுத் துறை மூலம் 1,021 புதிய டாக்டர்கள் தேர்வு செய்யப் பட்டனர்.

தேர்வு செய்யப்பட்ட இவர்கள் அனைவரும் 20 மாவட்டங்களில் உள்ள அரசு ஆஸ்பத்திரிகளில் நியமிக்கப்பட்டுள்ளார்கள். புதிய டாக்டர்களுக்கு பணி ஆணை வழங்கும் நிகழ்ச்சி டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக் கழக கூட்ட அரங்கில் இன்று நடந்தது.

மாவட்ட வாரியாக நியமிக்கப்பட்டுள்ள புதிய டாக்டர்கள் எண்ணிக்கை வருமாறு:-

அறந்தாங்கி-62, அரிய லூர்-45, செய்யாறு-41, திண்டுக்கல்-44, கோவில்பட்டி-44, மயிலாடு துறை-47, நாகப்பட்டி னம்-41, பரமக்குடி-60, புதுக்கோட்டை-64, ராம நாதபுரம்-48, சிவ கங்கை-84, சிவகாசி-50, தென்காசி-52, தஞ்சாவூர்-70, நீலகிரி-55, தூத்துக்குடி-38, நெல்லை-53, திருவண்ணா மலை-71, திருவாரூர்-106, எருது நகர்-43.

மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் டாக்டர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார். நிகழ்ச்சியில் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ககன்தீப் சிங் பேடி, துணை வேந்தர் டாக்டர் நாராயணசாமி, பொது சுகாதாரத்துறை இயக்குனர் டாக்டர் செல்வ விநாயகம், டாக்டா் சங்கு மணி உள்பட பலர் கலந்து கொண்டார்கள்.

Tags:    

Similar News