தமிழ்நாடு செய்திகள்

சென்னை சைதாப்பேட்டை ரெயில் நிலையத்தில் மீண்டும் ஒரு உயிர்பலி

Published On 2023-07-27 18:37 IST   |   Update On 2023-07-27 18:37:00 IST
  • வழக்குப்பதிவு செய்து தற்கொலை தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தினர்.
  • மனைவியை பிரிந்த சோகத்தில் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை என தகவல்.

சென்னை நங்கநல்லூரை சேர்ந்தவர் விஜய். திருமணமான இவர் இன்று சைதாப்பேட்டை ரெயில் நிலையத்தில் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துக் கொண்டுள்ளார்.

இதுகுறித்து தகவல் அறிந்து விரைந்த போலீசார், சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், வழக்குப்பதிவு செய்து தற்கொலை தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தினர்.

இதன் முதற்கட்ட தகவலில், விஜய் வேலை கிடைக்காத விரக்தியிலும், மனைவியை பிரிந்த சோகத்திலும் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துக் கொண்டது தெரியவந்துள்ளது. போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு சமோசா வியாபாரியான ராஜேஷ்வரி என்ற பெண்ணை நான்கு பேர் கொண்ட கும்பல் சென்னை சைதாப்பேட்டை ரெயில் நிலையத்தில் சரமாரியாக வெட்டி கொலை செய்த சம்பவம் அரங்கேறியது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News