தமிழ்நாடு செய்திகள்
தீயணைப்பு படையினர் ஷோரூமில் பற்றி எரிந்து தீயை அணைத்த காட்சி

விருத்தாசலம் அருகே தீயில் எரிந்து நாசமான 31 இருசக்கர வாகனங்கள்

Published On 2022-05-06 13:32 IST   |   Update On 2022-05-06 13:32:00 IST
விருத்தாசலம் அருகே தீ விபத்தில் ஷோரூமில் இருந்த 2 6புதிய வாகனங்கள் மற்றும் சர்வீசுக்கு வந்த 5 பழைய வாகனங்கள் என 31வாகனங்கள் மற்றும் 3லட்ச ரூபாய் மதிப்பிலான உதிரிபாகங்கள் முற்றிலுமாக எரிந்தது.

விருத்தாசலம்:

கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தை சேர்ந்தவர் செந்தில்குமார். இவர் விருத்தாசலம் அருகே வேப்பூரில் இருசக்கர வாகன ஷோரூம் வைத்துள்ளார்.

இந்த ஷோரூமில் இன்று காலை புகை வெளியனதைப் பார்த்த அக்கம்பக்கத்தினர் செந்தில்குமாருக்கு தகவல் தெரிவித்தனர். அவர் வருவதற்குள் தீ மேலும் பரவி ஷோரூம் முழுவதுமாக பற்றி எரிந்தது.

தகவலறிந்த வேப்பூர் மற்றும் விருத்தாசலம் தீயணைப்புத்துறையினர் நேரில் சென்று தீயை அணைத்தனர்.

எனினும் இந்த தீ விபத்தில் ஷோரூமில் இருந்த 2 6புதிய வாகனங்கள் மற்றும் சர்வீசுக்கு வந்த 5 பழைய வாகனங்கள் என 31வாகனங்கள் மற்றும் 3லட்ச ரூபாய் மதிப்பிலான உதிரிபாகங்கள் முற்றிலுமாக எரிந்தது. அதன் சேதமதிப்பு ரூ. 50 லட்சம் என முதல் கட்ட விசாரணையில் தெரியவந்து உள்ளது.

இதுகுறித்து வேப்பூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Similar News