செய்திகள்
கடம்பூர் மலைப்பகுதியில் தோன்றிய அருவி

தொடர் மழையால் கடம்பூர் மலைப்பகுதியில் தோன்றிய அருவி

Published On 2021-11-06 11:14 IST   |   Update On 2021-11-06 11:14:00 IST
கடம்பூர் மலைப் பாதையில் ஆங்காங்கே சிறு சிறு அருவிகள் தோன்றியதோடு சாலையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.
சத்தியமங்கலம்:

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்து அமைந்துள்ள கடம்பூர் மலைப்பகுதி கடல் மட்டத்திலிருந்து 1200 அடி உயரத்தில் அமைந்துள்ளது.

இம்மலைப்பகுதியில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. கடந்த சில நாட்களாக கடம்பூர் மலைப்பகுதியில் தொடர் மழை பெய்து வருவதால் மலைப்பகுதி முழுவதும் பசுமையாக காட்சி அளிக்கிறது.

இந்நிலையில் நேற்று மாலை கடம்பூர் மலைப் பகுதி முழுவதும் கன மழை வெளுத்து வாங்கியது. இதன் காரணமாக கடம்பூர் மலைப் பாதையில் ஆங்காங்கே சிறு சிறு அருவிகள் தோன்றியதோடு சாலையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

சத்தியமங்கலத்தில் இருந்து கடம்பூர் செல்லும் சாலையில் உள்ள மல்லியம்மன் துர்க்கம் கோவில் அருகே உள்ள மலைச்சரிவில் தோன்றிய அருவியை அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகள் தங்களது வாகனங்களை நிறுத்தி அருவிகள் முன்பு நின்று செல்போனில் புகைப்படம் எடுத்து சென்றனர்.



Tags:    

Similar News