செய்திகள்
பாண்டியன்

சுற்றுச்சூழல் துறை அதிகாரி பாண்டியன் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை

Published On 2021-01-11 10:41 IST   |   Update On 2021-01-11 10:41:00 IST
புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தில் உள்ள பாண்டியனின் வீடு மற்றும் வங்கி லாக்கரில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.
புதுக்கோட்டை:

சென்னையில் சுற்றுச்சூழல் துறை சூப்பிரண்டு பாண்டியன் என்பவர் வீடு மற்றும் அலுவலகத்தில் கடந்த மாதம்  லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய சோதனையில் ரூ.1.37 கோடி ரொக்கப்பணம், 3 கிலோ தங்க-வைர நகைகள், ரூ.37 லட்சம் வங்கி வைப்புத்தொகை, ரூ.7 கோடி அளவுக்கு 18 சொத்து ஆவணங்கள் போன்றவை பறிமுதல் செய்யப்பட்டன.

இதையடுத்து அதிகாரி பாண்டியன் தற்காலிக பணி இடைநீக்கம் செய்யப்பட்டு உள்ளார்.

இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தில் உள்ள  பாண்டியனின் வீடு மற்றும் வங்கி லாக்கரில் 6 பேர் கொண்ட லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.

இதையடுத்து அவரது வீட்டில் இருந்து ஏராளமான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Similar News