செய்திகள்
கடலூரில் 12,514 இலவச வீட்டுமனை பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளன- முதலமைச்சர்
கடலூர் மாவட்டத்தில் 12,514 இலவச வீட்டுமனை பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.
கடலூர்:
கடலூர் மாவட்டத்தில் நிறைவுற்ற ரூ.25.54 கோடியிலான புதிய திட்டப்பணிகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார். ரூ.32.16 கோடியிலான புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டிய முதல்வர் நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்.
கடலூர் மாவட்டத்தில் கொரோனா தடுப்பு பணிகளை ஆய்வு செய்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியதாவது:
* தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் முழு வீச்சில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
* இந்தியாவிலேயே அதிக பரிசோதனை தமிழகத்தில்தான் நடைபெறுகிறது.
* நாள்தோறும் 300க்கும் மேற்பட்ட காய்ச்சல் முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
* நடமாடும் பரிசோதனை மையங்கள் மூலம் நோய்த்தொற்று உடனடியாக கண்டறியப்படுகிறது .
* மருத்துவர்கள், செவிலியர்கள், முன்களப்பணியாளர்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பாராட்டு
* கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் விகிதமும் தமிழகத்தில்தான் அதிகமாக உள்ளது.
* கடலூர் மாவட்டத்தில் அதிக தடுப்பணைகள் கட்டப்பட்டுள்ளன.
* கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே ரூ.495 கோடியில் கதவணை கட்டும் பணிகள் 40% நிறைவடைந்துள்ளன.
* கடலூர் மாவட்டத்தில் சாலை வசதிகளை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன.
* கடலூர் மாவட்டத்தில் 12,514 இலவச வீட்டுமனை பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளன.
* 1,554 மகளிருக்கு மானிய விலையில் இருசக்கர வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளன.
* மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கு ரூ.225 கோடி சுழல் நிதி வழங்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.