விளையாட்டு
தாய்லாந்து மாஸ்டர்ஸ் பேட்மிண்டன்: இறுதிப்போட்டிக்கு முன்னேறினார் இந்திய வீராங்கனை
- தாய்லாந்து மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் தொடர் பாங்காக்கில் நடந்து வருகிறது.
- இதில் இந்திய வீராங்கனை தேவிகா சிஹாத் அரையிறுதி சுற்றில் வெற்றி பெற்றார்.
பாங்காக்:
தாய்லாந்து மாஸ்டர்ஸ் சர்வதேச பேட்மிண்டன் போட்டி பாங்காக்கில் நடந்து வருகிறது.
இதன் பெண்கள் ஒற்றையர் பிரிவு அரையிறுதி சுற்றில் இந்திய வீராங்கனை தேவிகா சிஹாத், சீனாவின் ஹுவாங் உடன் மோதினார்.
இதில் சிறப்பாக ஆடிய தேவிகா சிஹாத் 22-20, 21-13 என்ற செட் கணக்கில் வென்று இறுதிச்சுற்றுக்கு முன்னேறினார்.
நாளை நடைபெறும் இறுதிப்போட்டியில் இந்தியாவின் தேவிகா, மலேசியாவின் ஜின் வெய் உடன் மோதுகிறார்.